“வேணாம் தாத்தா ப்ளீஸ் தாத்தா” கெஞ்சிய கேப்ரியல்லா ; விட்டுகொடுக்காத சுரேஷ் சக்ரவர்த்தி

 “வேணாம் தாத்தா ப்ளீஸ் தாத்தா” கெஞ்சிய கேப்ரியல்லா ; விட்டுகொடுக்காத சுரேஷ் சக்ரவர்த்தி  

biggboss 4 tamil today promo


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதில் 17-வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் தொகுப்பாளினி அர்ச்சனாவும் வந்து சேர்ந்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து சுவாரஸ்யமும் ஈடுபாடும் குறைவாக இருக்கும் இரண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க பிக் பாஸ் ஆணையிடுகிறார் அதன் படி போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஷிவானி மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரை தேர்வு செய்கின்றனர். பின்னர் இவர்கள் இருவரையும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டும் படி ஆணையிடுகிறார்.

அடுத்து வெளியான ப்ரோமோதான் இன்றைய ஹைலைட், ரியோ, வேல்முருகன், கேப்ரியல்லா 3 பேரும் இந்த வார கேப்டனுக்கான நாமினேஷனில் இருக்க, இந்த வார கேப்டன் பதவிக்காக சற்று வித்தியாச டாஸ்க்கைக் கொடுக்கிறார் பிக் பாஸ். 

அவர்களை உப்பு மூட்டை ஏத்திக் கொண்டு நிற்க வேண்டும். ஆனால் யாருமே சின்ன பெண்ணான கேப்ரியல்லாவுக்கு ஆதரவு தரவில்லை ஆனால் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் ஆதரவு தந்து, அவரை உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு நிற்கிறார். 

வியர்வை சொட்ட சொட்ட உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு நிற்க்கும் சுரேஷ் சக்ரவர்த்தியை பார்த்து “வேணாம் தாத்தா ப்ளீஸ் தாத்தா” என்கிறார் கேப்ரியல்லா. ஒரு கட்டத்தில் அவராகவே இறங்கி, “சாரி தாத்தா” என அழுகிறார். “இதுக்கு ஏண்டி சாரி” என அனைத்துக் கொள்கிறார் சுரேஷ்.  

 

Post a Comment

0 Comments